அடுத்த ஆண்டுக்குள் இலங்கை தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு - அதிபர் ரணில் விக்ரமசிங்கே
Problem of srilankan Tamils resolved within next year
இலங்கையின் வடக்கு மாகாணம் மற்றும் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான வவுனியாவில், ஜனாதிபதி அலுவலகத்தின் ஒரு பகுதியை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே திறந்து வைத்தார். இதையடுத்து மக்களிடம் உரையாற்றிய அதிபர் இலங்கை தமிழர்களின் பிரச்சனைக்கு ஓராண்டுக்குள் தீர்வு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்த ஆண்டு இலங்கையின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதற்குள் இலங்கை தமிழர்களின் விவசாயம், நிலம் மற்றும் உரிமை சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
1983ஆம் ஆண்டு முதல் 2009 வரை நடந்த ஈழத் தமிழர் போரை நினைவு கூர்ந்த அதிபர், தமிழ் மக்களிடம் நிறைந்துள்ள அவநம்பிக்கையை முதலில் களைய வேண்டும் என்றும், நாம் ஒரு தாய் பிள்ளையாக ஒன்றிணைந்து செயல்பட்டால் அவநம்பிக்கை மறைந்து விடும் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Problem of srilankan Tamils resolved within next year