கொடூரம்! மனைவி உட்பட 42 பெண்! துண்டுதுண்டாக வெட்டி குட்பையில் வீசிய சைக்கோ கொலையாளி கைது! - Seithipunal
Seithipunal


கென்யாவில் மனைவி உட்பட 42 பெண்களை கொடூரமான முறையில் கொலை செய்த சைக்கோ கொலையாளி கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கென்யா நாட்டைச் சேர்ந்தவர் ஜோமைசி கலிசியா. இவர் தனது மனைவி உட்பட 42 பெண்களை கொடூரமான முறையில் கொலை செய்து புதைத்ததாக கூறப்படுகிறது. பெண்களை தனது வலையில் விழ வைத்து பெண்களுடன் உல்லாசமாக இருந்து பிறகு அந்த பெண்களை கொலை செய்வது இவரது வழக்கம்

சமீபத்தில் கென்யா நாட்டில் உபயோகப்படுத்தாத குவாரியில் இருந்தது அதிகளவில் துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து காவல்துறை குவாரில் உள்ள குப்பை கிடங்கில் இருந்து பல சடலங்கள்  கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் கென்யா நாட்டில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இது தொடர்பாக காவல்துறை குவாரிக்கு அருகில் இருந்த வீட்டைகளை சோதனை செய்தனர். அப்போது ஒரு வீட்டில் 10 செல்போன்கள், மடிக்கணினி, அடையாள அட்டைகள் மற்றும் பெண்களின் ஆடைகள் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் உடல்களை அப்புறப்படுத்த 9 சாக்குகளை போலீசார் கைப்பற்றினர்.

அதனை தொடர்ந்து வீட்டின் உரிமையாளரை காவல்துறை தீவிரமாக தேடிவந்த நிலையில், காவல்துறை சைக்கோ கொலையாளியை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர். தனது மனைவியை கொலை செய்து குப்பை கிடங்கில் விசீவிட்டேன்.

பிறகு ,அடுத்தடுத்தாக 42 பெண்களை கொன்று அவர்களின் உடல்களை குப்பை தொட்டியில் வீசியதை அவர் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Psycho killer who brutally killed 42 women including his wife arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->