இந்த மனசு தான் சார் கடவுள்... சிரியா, துருக்கி மக்களுக்கு 10 ஆயிரம் கேரவன்களை வழங்கும் கத்தார்...!! - Seithipunal
Seithipunal


கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி அதிகாலை சிரியா மற்றும் துருக்கி எல்லைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 42 ஆயிரம் பேர் தற்பொழுது வரை உயிரிழந்த நிலையில் மீட்பு பணிகள் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தது.

துருக்கி மற்றும் சிரியாவில் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த வீடுகளை இழந்து நடுத்தெருவில் தவித்து வருகின்றனர். உலக நாடுகள் பலவும் அத்தியாவசிய பொருட்களை துருக்கி மற்றும் சிரியாவுக்கு அனுப்பி வருகின்றன.

இந்த நிலையில் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிரியா மற்றும் துருக்கிக்கு கத்தார் 10 ஆயிரம் சொகுசு கேரவன்களை அனுப்ப உள்ளது. 

குடியிருந்த வீடுகள் எல்லாம் குப்பையாக இருக்கும் நிலையில் கொட்டும் பணியில் மக்கள் குளிரில் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 ஆயிரம் கேரவன்களை கத்தார் அரசு அனுப்ப உள்ளது.

கத்தார் நாட்டில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் பொழுது ரசிகர்கள் தங்குவதற்கு சுற்றுச்சூழல் மாசில்லாத வகையில் கண்டெய்னர்களில் சொகுசு கேரவன்களை அந்நாடு உருவாக்கியிருந்தது.

அதில் முதல் கட்டமாக 350 கேரவன்களை துருக்கி நாட்டிற்கு அனுப்ப கத்தார் அரசு முடிவு செய்துள்ளது. மேலும் படிப்படியாக சுமார் 10,000 மேற்பட்ட கேரவன்கள் துருக்கி மற்றும் சிரியா நாடுக்களுக்கு அனுப்பப்படும் என கத்தார் அரசு அறிவித்துள்ளது. கத்தார் நாட்டின் இத்தகைய முன்னெடுப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Qatar will provide 10 thousand caravans to Syria Turkey people


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->