52 வருடங்களுக்கு பிறகு ராணி எலிசபெத்தின் புகைப்படம் அரசகுடும்பம் வெளியீடு..!  - Seithipunal
Seithipunal


கடந்த 8-ந்தேதி இங்கிலாந்து நாட்டின் ராணியான இரண்டாம் எலிசபெத் காலமானார். அவர் இறந்த மறுநாள் அந்நாட்டின் மன்னராக சார்லஸ் அறிவிக்கப்பட்டார். ராணி எலிசபெத் மறைவின் காரணமாக அரச முறை துக்கம் கடைப்பிடிப்பது பற்றி பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 

அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "மாட்சிமை தங்கிய ராணியின் மறைவையடுத்து, அவரது இறுதிச்சடங்குக்கு பின்னர், மேலும் ஒரு வாரம் அரச துக்கம் கடைப்பிடிக்க வேண்டும் என்பது மன்னரின் விருப்பம். அரச துக்கம் என்பது அரச குடும்பத்தினரால், பணியாளர்களால், படையினரால் கடைபிடிக்கப்படும்". 

அரச துக்கம் கடைபிடிப்பதன் காரணமாக அரச குடும்பத்தினர் எந்தவொரு அதிகாரபூர்வ நிகழ்ச்சியிலும் மேலும் ஒரு வாரம் பங்கேற்க மாட்டார்கள்.இந்நிலையில், அரச குடும்பம் இதுவரை வெளியிடப்படாத ராணி எலிசபெத்தின் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. 

இந்தப்புகைபடம் 1971-ம் ஆண்டு ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள பால்மோரல் கோட்டையில் எடுக்கப்பட்டதாகும். இந்தப்புகைபடத்தை அரச குடும்பம், "உங்கள் துயிலுக்காய் பறக்கும் தேவதைகள் பாடட்டும், மாட்சிமை தங்கிய ராணியின் நினைவாக" என்ற வார்த்தைகளுடன் பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ள "உங்கள் துயிலுக்காய் பறக்கும் தேவதைகள் பாடட்டும்" என்ற வரிகள், ஷேக்ஸ்பியரின் 'ஹேம்லட்' நாடகத்தில் வரக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

queen elezabeth photo uplode in family members


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->