ராணி எலிசபெத் எழுதிய ரகசிய கடிதத்தை, 2085 -ல் திறக்க சொன்னதற்கான காரணம் என்ன?
queen elezabeth write secret letter in australia
இங்கிலாந்து நாட்டின் ராணியாக 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தவர் ராணி இரண்டாம் எலிசபெத். 1952-ம் ஆண்டு முதல் ராணியாக இருந்த இவர் கடந்த வியாழ கிழமை உடல்நல குறைவால் சிகிச்சை பலனின்றி காலமானார்.
கடந்த 1986-ம் ஆண்டு நவம்பரில் இங்கிலாந்தின் மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் ஆஸ்திரேலியா நாட்டுக்கு தனது கைப்பட ரகசிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் சிட்னி நகர மக்களின் முகவரியை குறிப்பிட்டு அனுப்பியுள்ளார். அதனால், இந்த கடிதம் சிட்னி நகரில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடம் ஒன்றில் விலை மதிப்புடைய பொருட்களை வைக்க கூடிய அறையில் வைத்து பூட்டி பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செவன் நியூஸ் ஆஸ்திரேலியா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ராணியின் தனிப்பட்ட ஊழியர் உள்பட எவருக்கும் அந்த கடிதத்தில் என்ன எழுதப்பட்டு உள்ளது என்பது பற்றி தெரியாது. ஏனெனில் அந்த கடிதம் ஒரு கண்ணாடி பெட்டிக்குள் பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
2085-ம் ஆண்டு வரை அதனை திறந்து பார்க்க முடியாது. ஏனெனில், அந்த கடிதத்தில் சிட்னி நகர மேயரை குறிப்பிட்டு, வருகிற 2085-ம் ஆண்டு, நீங்கள் தேர்வு செய்ய கூடிய ஒரு நல்ல நாளில், இந்த கடிதத்தை திறக்கவும்.
அதில் உள்ள எனது செய்தியை சிட்னி நகர மக்களுக்கு தெரிவிக்கவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் எலிசபெத் ஆர் என எளிமையான முறையில் கையெழுத்து இடப்பட்டுள்ளது.
ராணி இரண்டாம் எலிசபெத் ஆஸ்திரேலியாவுக்கு, அதன் தலைவர் என்ற முறையில் 16 முறை பயணித்திருக்கிறார். கடந்த 1999-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் தலைவர் பதவியில் இருந்து ராணியை நீக்குவதற்கான பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எனினும், அது பின்னர் தோற்கடிக்கப்பட்டது. ராணி மறைவை அடுத்து அவருக்கு சிட்னி நகரில் உள்ள பிரபல ஓப்பரா ஹவுஸ் அஞ்சலி செலுத்தும் வகையில் ஒளியூட்டப்பட்டது. நேற்று ஆஸ்திரேலியாவின் தலைவராக அரசர் 3-ம் சார்லஸ் முறைப்படி அறிவிக்கப்பட்டார்.
English Summary
queen elezabeth write secret letter in australia