சீனாவில் அதிகரிக்கும் வெப்பநிலை.! 10 நாட்களுக்கு சிவப்பு எச்சரிக்கை நீட்டிப்பு
Red alert in China increased to 10 days
சீனாவில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்ப அலை வீசி வருவதால் கான்சு, ஹெனான், அன்ஹு சான்சி உள்ளிட்ட மாகாணங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் அதிகரித்து வரும் வெப்பநிலையால் நாடு முழுவதும் 10 நாட்களுக்கு சிவப்பு எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வெப்பநிலை உயர்வால் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளதால் பஞ்சத்திற்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் நிலவும் வறட்சியால் மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் விவசாயத்திற்கு ஏற்படும் பாதிப்பினை குறைக்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மேலும் உயரும் வெப்பநிலையால் காட்டு தீ மற்றும் தீ விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால், உள்ளூர் நிறுவன நிர்வாகங்கள் கவனத்துடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளன.
English Summary
Red alert in China increased to 10 days