இலங்கைக்கு அனுப்ப வேண்டாம்.! வியட்நாமில் அகதிகள் கோரிக்கை.!
Refugees request in Vietnam not to send us to Sri Lanka
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு தவித்து வருகின்றனர்.
இதனால் இலங்கை மக்கள் அகதிகளாக இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட ஆண்டை நாடுகளுக்கு கடல் வழியாக படகு, கப்பல் மூலம் செல்கிறார்கள்.
இந்நிலையில் இலங்கை அகதிகளை ஏற்றிச்சென்ற கப்பல் தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் சென்று கொண்டு இருந்தபோது திடீரென கப்பல் பழுதடைந்ததால் நடுக்கடலில் தத்தளித்தது. இந்த கப்பலில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என 317 பேர் பயணம் செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த இலங்கையின் கடல் சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம், சிங்கப்பூர், வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் உதவியை நாடியது. இதைத்தொடர்ந்து, சிங்கப்பூர் அதிகாரிகள் நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த 317 இலங்கை அகதிகளை மீட்டு வியட்நாமிற்க்கு அழைத்து சென்றனர்.
இதையடுத்து மீட்கப்பட்ட இலங்கை அகதிகள், வியட்நாமில் தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் இலங்கை அகதிகளை நாட்டுக்கு கொண்டு வர முயற்சி எடுக்கப்படும் என்று இலங்கை கடற்தொழில் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஆனால் வியட்நாமில் உள்ள அகதிகள், தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்று கூறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் இலங்கையில் எங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு, வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், எங்களை அங்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்று அகதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
Refugees request in Vietnam not to send us to Sri Lanka