போரில் உக்ரைனுக்கு தொடர்ந்து இங்கிலாந்து ஆதரவு அளிக்கும் - பிரதமர் ரிஷி சுனக் உறுதி
Rishi Sunak assures UK will continue to support Ukraine in war
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் உக்ரைனில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இப்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பா மற்றும் மேற்கத்திய நாடுகள் பொருளாதார வகையிலும் ஆயுதங்களை வழங்கியும் உதவி வருகின்றன.
இந்நிலையில் இங்கிலாந்தின் 57வது பிரதமராக பதவியேற்ற ரிஷி சுனக், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில் ரஷ்யாவுடனான போரில், உக்ரைனுக்கு தொடர்ந்து இங்கிலாந்து ஆதரவு அளிக்கும் என உறுதி அளித்ததாக இங்கிலாந்து பிரதமரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற ரிஷி சுனக் தனது முதல் உரையின் போது, நான் தவறுகளை சரிசெய்ய நியமிக்கப்பட்டேன். நான் நம் நாட்டை வார்த்தைகளால் அல்ல, செயலால் ஒன்றிணைப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Rishi Sunak assures UK will continue to support Ukraine in war