இங்கிலாந்து பிரதமர் போட்டியில் ரிஷி சுனக் முன்னிலை! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து புதிய பிரதமராக பதவியேற்ற லிஸ் டிரஸ் பொருளாதார நடவடிக்கைகள் சீர்திருத்தம் மேற்கொண்டார். இங்கிலாந்தில் ஏற்பட்ட பொருளாதாரம் மந்த நிலைக்கு பிரதமர் லிஸ் டிரஸ் தான் காரணம் என தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு வைத்தனர். டாலருக்கு நிகரான இங்கிலாந்து பவுண்டின் மதிப்பு குறைந்ததால் நிதி அமைச்சராக இருந்த குவாசி குவார்டெங்கை பதவியில் இருந்து நீக்கினார் இங்கிலாந்து பிரதமர். 

இந்த நிலையில் இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் திடீர் என தன் பதவியை ராஜினாமா செய்தார். இவர் பிரதமராக பதவியேற்ற 45 நாட்களில் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இங்கிலாந்தில் அரசியல் மற்றும் பொருளாதார குழப்பம் நீடித்து வரும் நிலையில் லிஸ் டிரஸ் பதவி விலகினார். இதனை அடுத்து கன்சர்வேட்டிவ் கட்சி வருகின்ற 28ஆம் தேதி புதிய பிரதமரை தேர்வு செய்து அறிவிக்கவுள்ளது. 

பிரதமர் போட்டியில் பெரும்பாலான கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களின் ஆதரவு ரிஷி சுனக்கிற்கு இருப்பதாக தெரிய வருகிறது. அடுத்த படியாக பென்னி மோர்டான்ட் இரண்டாவது இடத்திலும், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் மூன்றாவது இடத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த பிரதமர் தேர்தலில் லிஸ் டிரஸ்ஸிற்கு ரிஷி சுனக் கடும் போட்டியாக விளங்கினார். இந்த நிலையில் அடுத்த பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rishi Sunak is leading in the UK Prime Minister race!


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->