பிரதமர் போட்டியில் இருந்து விலகிய போரிஸ் ஜான்சன்! அடுத்த பிரதமர் ரிஷி சுனக்! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து புதிய பிரதமராக பதவியேற்ற லிஸ் டிரஸ் பொருளாதார நடவடிக்கைகள் சீர்திருத்தம் மேற்கொள்ண்டார். இதன் காரணமாக பொருளாதாரம் மந்த நிலைக்கு இங்கிலாந்தின் புதிய பிரதமர் தான் காரணம் என தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இந்த நிலையில் இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் திடீர் ராஜினாமா செய்தார்.

 இவர் பிரதமராக பதவியேற்ற 45 நாட்களில் பதவியை ராஜினாமா செய்தார். இங்கிலாந்தில் அரசியல் மற்றும் பொருளாதார குழப்பம் நீடித்து வரும் நிலையில் லிஸ் டிரஸ் பதவி விலகினார். இதனை எடுத்து கன்சர்வேட்டிவ் கட்சி வருகின்ற 28ஆம் தேதி புதிய பிரதமரை தேர்வு செய்யப்படும் என அறிவித்திருந்தது.

பிரதமர் போட்டியில் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களின் 140 பேர் ரிஷி சுனக் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் கன்சர்வேட்டிவ் கட்சியின் 100 உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில் பிரதமர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

 இதனால் பென்னி மார்டன்ட் மற்றும் ரிஷி சுனக் இடையே நேரடி போட்டி உருவாகியுள்ளது. பென்னி மார்டன்டுக்கு 100 கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவு அளிக்காவிட்டில் ரிஷி சுனக் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rishisunak will be next uk prime minister Boris Johnson withdrew from race


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->