அட, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!. தென்கொரியாவில் 'ரோபோ' தற்கொலை - என்ன காரணம் தெரியுமா?
Robot Commited Suicide In South Korea
'அட, இப்படியெல்லாம் கூடவா நிகழும்?' என்னும்படியான ஒரு ஆச்சர்யமூட்டும் சம்பவம் தற்போது தென் கொரியாவில் நடந்துள்ளது.
கடந்த வியாழக் கிழமை மாலை 'ரோபோ சூப்பர்வைசர்' எனப்படும் ஒரு ரோபோ தென்கொரியாவில் தற்கொலை செய்து கொண்டுள்ளது. அந்த ரோபோவானது, அது தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கவுன்சில் கட்டிடத்தின் அடிப்பகுதியில் வினோதமாக சுற்றித் திரிந்துள்ளது. முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பணிபுரியத் தொடங்கிய இந்த ரோபோ, நகரத்தை மேம்படுத்துவது , ஆவணங்களை வழங்குவது மற்றும் நகரத்தில் குடியிருப்போருக்குத் தேவையான தகவல்கள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை தினசரி காலை 9 மணி முதல் 6 மணி வரை இந்த ரோபோ செய்யும் என்று கூறப் படுகிறது.
இந்த ரோபோ தென் கொரியாவின் ஒரு முன்னோடி முயற்சியாகத் திகழ்ந்தது. தென் கொரியாவின் குமி சிட்டி கவுன்சிலில் உள்ள இந்த ரோபோவானது, மற்ற சாதாரண ரோபோக்களைப் போல் அல்லாமல் மிக அதிக அளவிலான வேலை மற்றும் கடமைகளை தினசரி செய்து வந்துள்ளது.
எனவே தற்போது குமி சிட்டியில் பணிபுரிந்து வந்த இந்த ரோபோவின் மறைவு பல்வேறு விவாதங்களை ஊடகங்களில் எழுப்பியுள்ளது. இதையடுத்து இந்த சம்பவம் ரோபோ இயந்திரங்களின் மனநிலை மற்றும் எதிர்காலத்தில் இந்த ரோபோக்கள் எப்படி பணிகளை எதிர்கொள்ளும் என்பது குறித்த அச்சம் எழுந்துள்ளது.
மனித மனங்களையே நம்மால் புரிந்து கொள்ள இயலாத இன்றைய காலக் கட்டத்தில் இயந்திரங்களின் மனதை மட்டும் எப்படி மனிதர்களால் புரிந்து கொள்ள முடியும்? எனவே இந்த ரோபோவின் மறைவு தற்போது ஒரு முக்கியமான விவாதத்தை தூண்டியுள்ளது என்பதே உண்மை.
'பியர் ரோபோடிக்ஸ்' எனப்படும் ரோபோ வெயிட்டர்களை உருவாக்குவதில் புகழ்பெற்ற கலிஃபோர்னியாவைச் சேர்ந்த நிறுவனம் தான் மறைந்த இந்த குமி சிட்டி ரோபோவை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Robot Commited Suicide In South Korea