அதிகரித்த பதற்றம்.. உக்ரைனில் ரஷ்ய வான்வெளி வீரர்கள் தரையிறக்கம்.!!
Russia army in Ukraine
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்யா கடந்த ஒரு வாரமாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. குண்டு மழை பொழிந்தும், ஏவுகளைகளை வீசியும் தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷ்ய படைகள் குறிப்பாக உக்ரேனின் தலைநகர் கீவாவை சின்னாபின்னமாகி வருகிறது. உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் உலகப் பேருக்கு வழிவகுக்குமோ என உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. இருநாடுகளும் சமாதான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாதது எடுத்து, உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவம் தாக்குதல் அதிகரித்து உள்ளது. போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இந்நிலையில், உக்ரைனின் 2வது பெரிய நகரமான கார்கிவ் நகரில் ரஷ்ய வான்வெளி வீரர்கள் தரையிறங்கியுள்ளதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது. இதனால் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.