உக்ரைனின் கெர்சன் பகுதியில் ரஷ்யா பயங்கர தாக்குதல் - 7 பேர் பலி, 58 பேர் காயம்
Russia attack on Kherson kills 7 people
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் பத்து மாதங்கள் நிறைவு பெற்ற நிலையில், ரஷ்யா தனது தீவிர தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. போரின் தொடக்கத்திலிருந்தே கெர்சன் பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த ரஷ்யா, உக்ரைன் படைகளின் தீவிர தாக்குதலினால் கெர்சன் பகுதியிலிருந்து ரஷ்யப்படைகள் வெளியேறின.
இருப்பினும் கெர்சான் மாகாணம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் வான்வழி தாக்குதலை ரஷ்யா தீவிரமாக நடத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று கெர்சான் பகுதியில் ரஷ்ய படைகள் வான்வழி மூலம் பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 58 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு பேசிய அதிபர் ஜெலன்ஸ்கி , இந்த புகைப்படங்களை பார்க்கும் பொழுது உங்களுக்கு கொடூரமான படங்களாக தெரியலாம். ஆனால் கெர்சன் பகுதியை பொருத்தவரையில் இது சாதாரண காட்சிகள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை மக்கள் ஆவலுடன் வரவேற்கும் பொழுது கெர்சன் பகுதியில் கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Russia attack on Kherson kills 7 people