உக்ரைனின் கெர்சன் பகுதியில் ரஷ்ய படைகள் தாக்குதல் - 15 பேர் பலி
Russia attacks on kherson city in Ukraine
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் இன்று 276-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனில் ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ள முக்கிய நகரங்களை உக்ரைன் படைகள் மீட்டுள்ளதால் கெர்சன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரஷ்ய படைகள் பின்வாங்கியுள்ளன.
இதனால் உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்திய ரஷ்ய படைகள், உக்ரைனில் உள்ள மின் நிலையங்களை குறி வைத்து தாக்கியது. மேலும் கடந்த சில நாட்களாக உக்ரைனின் முக்கியமான உள்கட்டமைப்புகளை தாக்குவதற்கு ரஷ்ய படைகள் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்நிலையில் கெர்சனில் ரஷிய படைகள் சரமாரியாக ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தியதில் 15 பேர் பலியானதாகவும், ஒரு குழந்தை உட்பட 35 பேர் காயமடைந்தனர் என்று நகர அதிகாரி கலினா லுகோவா தெரிவித்துள்ளார். உக்ரைனின் மின் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதால் மக்கள் மின்சாரமின்றி தவித்து வருகிறார்கள்.
மேலும் நாட்டில் 60 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளது என்று அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
English Summary
Russia attacks on kherson city in Ukraine