உக்ரைனில் உள்ள முக்கிய நகரை கைப்பற்றிய ரஷ்யா.!! - Seithipunal
Seithipunal


உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி தாக்குதல், கடல்வழி மற்றும் தரைவழி என முப்படைகள் படைகளின் தாக்குதலை நடத்துவதால் பெரும் சேதமும், உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. 

உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ தளங்களை ரஷ்ய படைகள் தாக்கி அழித்து உள்ளது. அதேபோல தங்களை தற்காத்துக்கொள்ள ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.

ரஷ்யாவுடனான முதல்நாள் போரில் 137 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். ரஷ்யாவைச் சேர்ந்த 50 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உக்ரைன் மீது 2வது நாளாக போரைத் தொடங்கியது ரஷ்யா. உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் மீது குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. 

உக்ரைனில் உள்ள மிலிடோபோல் நகரையும் ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளது. அமைதியாக சரணடைந்து இருப்பதாக மிலிடோபோல் நகர் மேயர் தெரிவித்துள்ளார். உக்ரைனில் உள்ள பல்வேறு நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia captures the City of Millitopol


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->