2024க்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து வெளியேறுவதாக ரஷ்யா அறிவிப்பு - Seithipunal
Seithipunal


2024க்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து வெளியேறுவதாக ரஸ்யா அறிவித்துள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை கண்டித்து ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தது.

இந்நிலையில் உலக நாடுகளின் பொருளாதார தடை சர்வதேச விண்வெளி மையத்தில் ரஷ்யாவின் ஒத்துழைப்பை சீர்க்குலைக்கும் என விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்கோஸ்மாஸ் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், திடீரென சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து விலக உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இதையடுத்து ரஷ்யா 2024-க்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தை விட்டு வெளியேறி, அதன் சொந்த சுற்றுப்பாதையை அமைப்பதில் கவனம் செலுத்த உள்ளது என்று ரஸ்யாவின் விண்வெளி ஆய்வு நிறுவன தலைவர் யூரி போரிசோவ் தெரிவித்துள்ளார்.

மேலும் உக்ரைனில் கிரெம்ளின் ராணுவ நடவடிக்கை சம்பந்தமாக ரஷ்யாவிற்கும், மேற்கு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia exits international space station after 2024


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->