மேற்கத்திய நாடுகள் கலாச்சாரத்தை சீரழிக்கின்றன - அதிபர் புதின்
Russia President Putin says western countries destroying culture
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த ஆண்டு பிப்ரவரி 24 முதல் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யா உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றி முன்னேறி வருகிறது. மேலும் உக்ரைனின் கிழக்கு பகுதிகளை கைப்பற்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் அதிபர் புதின் ரஷ்ய நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது, உக்ரைன் போர் மட்டுமின்றி, கலாச்சாரம் தொடர்பான விஷயங்களில் அத்துமீறுவதாக மேற்கத்திய நாடுகளை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் மேற்கத்திய நாடுகளில் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிபர் புதின் மேற்கத்திய நாடுகள் குடும்ப அமைப்பு, கலாச்சார-வரலாற்று அடையாளத்தை சீரழிப்பதாக தெரிவித்தார்.
குடும்பம் என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையேயான உறவு மட்டுமே அதை மீறினால், நாட்டின் சமூக அழிவுக்கு வழிவகுக்கும் என்றும், சமீபத்தில் ஆண்பால், பெண்பால் பெயரின்றி பாலின-நடுநிலை பிரதிபெயர்களை அறிமுகப்படுத்த இங்கிலாந்து தேவாலயம் பரிசீலித்து வருவதையும் அதிபர் புடின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
Russia President Putin says western countries destroying culture