பேச்சுவார்த்தை நடத்த தயார்... ஆனால் கைப்பற்றிய பகுதிகளை விட்டுத்தர மாட்டோம் - ரஷ்யா - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி தொடங்கி ஓராண்டிற்கும் மேலாக நடந்து வருகிறது. போரினால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், இரு தரப்பினரும் பேச்சு வார்த்தைக்கு திரும்ப இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் உக்ரைனுடன் அமைதி பேச்சு வார்த்தையை நடத்துவதற்கு ரஷ்யா தயாராக இருப்பதாகவும், ஆனால் உக்ரைனில் கைப்பற்றிய பகுதிகளை விட்டுத்தர மாட்டோம் ரஷ்யா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய அதிபரின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைனுடன் அமைதிப்பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா எப்பொழுதும் தயாராக இருப்பதாகவும், ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன் மற்றும் ஜப்போரிஜியா ஆகிய மாகாணங்களை திருப்பி அளிக்க முடியாது என்றார்.

இதில் ரஷ்யா ஒருபோதும் சமரசம் செய்யாது என்றும் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் போரினிடையே பொது வாக்கெடுப்பின் மூலம் உக்ரைன் மாகாணங்களை ரஷ்யாவுடன் இணைத்துக் கொண்டது சட்டத்திற்கு புறம்பானது என மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia ready for peace talk with ukraine but wont return territories


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->