உக்ரைன் போர் நீண்ட காலம் நீடிக்கும்... ரஷ்யா அதிர்ச்சி தகவல்...! - Seithipunal
Seithipunal


நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய விரும்பியதை எதிர்த்து கடந்த ஆண்டு ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது. இதைத்தொடர்ந்து ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்க அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனுக்கு நவீன ஆயுதங்களை வழங்கி உதவி வருகின்றன.

இந்நிலையில் உக்ரைன் போர் தொடங்கி 15 மாதங்கள் ஆகியும் முடிவு பெறாமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் சர்வதேச அளவில் உணவு விநியோக சங்கிலி, ஏற்றுமதி மற்றும் எரிவாயு விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வியட்நாம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணைத்தலைவர் டிமிட்ரி மெட்வடே செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது உக்ரைன் போர் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, உக்ரைன் போர் நீண்ட காலத்திற்கு நீடிக்கும். ரஷ்யா- உக்ரைன் போர் முடிவடைந்தாலும் மீண்டும் போர் தொடர வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். ரஷ்யா அதிகாரியின் இந்த கருத்து உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர நினைக்கும் நாடுகள் மற்றும் தலைவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia says The war in Ukraine will last a long time


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->