உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா.. அடுத்தடுத்து ரஷ்யாவின் தலையில் இடியை இறக்கும் உலகநாடுகள்.!!
Russia Ukraine war issue
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி தாக்குதல், கடல்வழி மற்றும் தரைவழி என முப்படைகள் படைகளின் தாக்குதலை நடத்துவதால் பெரும் சேதமும், உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ தளங்களை ரஷ்ய படைகள் தாக்கி அழித்து உள்ளது. அதேபோல தங்களை தற்காத்துக்கொள்ள ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.
ரஷ்யாவுடனான முதல்நாள் போரில் 137 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். ரஷ்யாவைச் சேர்ந்த 50 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ரஷ்யா மீது பல தடைகளை விதிப்பதாக தைவான் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகள் தடை விதிக்க இருப்பதாக தெரிவித்துள்ளன. ரஷ்ய தூதரகத்தின் மூத்த அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது அமெரிக்கா.
இதனுடைய உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதின் உடன் பேச திட்டம் இல்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைனை தாக்கிய ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. போரை தேர்ந்தெடுத்தது ரஷ்யா தான். அதன் விளைவுகளை சந்தித்தே தீர வேண்டும் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.