உக்ரைன் கண்ணிவெடியில் சிக்கி அடுத்தடுத்து வெடித்து சிதறிய ரஷ்ய டேங்குகள்..!!
Russian tanks blasted by landmine in ukraine
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் ஓராண்டிற்கும் மேலாக நடந்துவரும் நிலையில், கிழக்கு பகுதிகளை கைப்பற்ற ரஷ்யா தனது படைகளுடன் முன்னேறி வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் கிழக்கு மாகாணமான டொண்ட்ஸ்க் பகுதியில் வூஹ்லேடர் நகரத்தை சுற்றி வளைப்பதற்காக ரஷ்யாவின் 155வது டேங்க் படைப்பிரிவு சென்று கொண்டிருந்தது.
அப்பொழுது ஊடுருவலை தடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில் சிக்கி அடுத்தடுத்து டேங்க்குகள் வெடித்து சிதறியுள்ளன. இது தொடர்பான வீடியோ காட்சிகளை உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அனுபவம் இல்லாத வீரர்களை வைத்து டேங்க்குகள் இயக்கப்படுவதே விபத்திற்கு காரணம் என்று ரஷ்யா தெரிவித்துள்ள நிலையில், ரஷ்யபடைகள் உக்ரைனின் வூஹ்லேடர் நகரத்தை ஊடுருவ முயற்சிப்பதை ரஷ்ய அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
இதனிடையே வூஹ்லேடர் நகரை எந்த விலை கொடுத்தேனும் கைப்பற்ற வேண்டும் என ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு தெரிவித்துள்ளார்.
English Summary
Russian tanks blasted by landmine in ukraine