ஜபோரிஜியா மாகாணத்தில் பொதுமக்கள் சென்ற வாகனத்தின்‌ மீது ரஷ்யப்படைகள் தாக்குதல்.! 23 பேர் பலி - Seithipunal
Seithipunal


ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் 7 மாதங்களாக தீவிரமாக நடந்து வரும் நிலையில், உக்ரைனிடமிருந்து லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா மாகனங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியது.

இதையடுத்து இந்த நான்கு மாகாணங்களை ரஷ்யவுடன் இணைப்பதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் பெரும்பாலான மக்கள் ரஷ்யாவுடன் இணைவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும் கெர்சன் மற்றும் ஜாபோரிஜியா ஆகிய இரண்டு மாகானங்களையும் சுதந்திர பிரதேசங்களாக அங்கீகரித்து ஆணையில் அதிபர் புதின் கையெழுத்திட்டுள்ளார்.

இந்நிலையில் ஜபோரிஜியா மாகாணத்தில் ரஷ்யா கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து உக்ரைன் மக்கள், தங்கள் உறவினர்களை அழைத்துச் செல்வதற்காக வாகனத்தில் செல்லும் பொழுது ரஷ்யப்படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 28 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் ஜபோரிஜியா மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார். மேலும் தாக்குதல் நடந்த பகுதியில் ராணுவம் மற்றும் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russian troops attacks public vehicle in Zaporizhia province


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->