பின்லாந்து எல்லைக்குள் நுழைய ரஷ்யர்களுக்கு தடை! - Seithipunal
Seithipunal


ரஷ்ய அதிபரின் அறிவிப்பால் நாட்டை விட்டு வெளியேறும் மக்கள்!

உக்ரைனில் நடந்து வரும் போரில் ரஷ்ய ராணுவத்தின் வீரர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வீரர்களை ஒன்றிணைக்க உத்தரவிடப்பட்டது. அதேபோல் நாட்டிற்காக பொதுமக்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற தீர்மானமும் கொண்டுவரப்பட்டது.

இதனால் அதை விளாடிமிர் புதினின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ரஷ்யாவிலிருந்து வெளிநாட்டு செல்லும் விமான இருக்கைகள் முன்பதிவு அதிக அளவில் செய்யப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேற முடிவெடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இன்னிலையில் ரஷ்யாவின் அண்டை நாடான போலாந்து, பின்லாந்து போன்ற நாடுகளுக்கு சுற்றுலா விசா பயன்படுத்தி ரஷ்ய நாட்டவர்கள் அதிகமானோர் செல்ல தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு இன்று இரவு முதல் ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கு பின்லாந்தில் நுழைய அனுமதி இல்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து பின்லாந்து வெளியுறவு துறை அமைச்சர் பெக்கா ஹாவிஸ்டோ செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில் "இந்த முடிவு தற்போதுய நிலையில் இருந்து பில்லாந்துக்கு படையெடுக்கும் மக்களை முற்றிலும் தடுக்கும் நோக்கமாகக் கொண்டுள்ளது. எனினும் குடும்ப நபர்களை சந்திக்க வருபவர்கள், வேலை மற்றும் படிப்பு சம்பந்தமாக வருபவர்கள் பின்லாந்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார் 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russians banned from entering Finland


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->