மோசமடையும் காற்றின் தரம் - பஞ்சாப்பில் 24-ந்தேதி வரை கல்வி நிலையங்களுக்கு விடுமுறை..!
school and colleges leave till november 24 for air pollutionin punjab pakistan
பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதாவது காற்று தரக்குறியீடு இதுவரை இல்லாத வகையில், 1,600 என்ற அளவில் உயர்ந்துள்ளது. காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்துள்ள சூழலில், பள்ளி உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு 17-ந்தேதி வரை அனைத்து கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், மாகாணத்தில் புகைமூட்டம் மற்றும் குறைவான தொலைவையே பார்க்க கூடிய சூழல் நிலவுவதால், அனைத்து கல்வி நிலையங்களுக்கும் 24-ந்தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன் படி, அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் தனியார் கல்வி பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் ஆன்லைன் வழியே கல்வி பயிற்சியை தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், முர்ரீ மாவட்டத்திற்கு இதற்கு விதிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, புகைமூட்டம் பரவி நிலைமை மோசமடைந்த நிலையில், லாகூர் மற்றும் முல்தான் நகரங்களில் வாரத்திற்கு மூன்று நாட்கள் வரை முழு ஊரடங்கை பஞ்சாப் அரசு நேற்று அமல்படுத்தியது.
அந்த அறிவிப்பின் படி இன்றும் நாளையும் இந்த முழு ஊரடங்கு தொடரும். வருகிற திங்கட்கிழமை முதல் 3 நாட்களுக்கு நிலைமை கண்காணிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
English Summary
school and colleges leave till november 24 for air pollutionin punjab pakistan