பள்ளி, கல்லூரிகளில் கலைப்பயிற்சிக்கு தனி வகுப்புகள் - வாகை சந்திரசேகர் வலியுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


நேற்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில், சேலம் மற்றும் கோவை மண்டல இயல், இசை, நாடக கலைஞர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குநர் செந்தில்குமார் மற்றும் முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 

இவ்விழாவில் இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் நடிகர் வாகை சந்திரசேகர் மற்றும் உறுப்பினர் செயலர் விஜயா தாயன்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட 6 மாவட்டங்களைச் சேர்ந்த 80 கலைஞர்களுக்கு ரூ. 15 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.

அதன்பின்னர், நடிகர் வாகை சந்திரசேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, "கலை பண்பாட்டுத்துறை சார்பில் இயல், இசை, நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு குடும்பப் பராமரிப்பு நிதி மற்றும் ஆடை ஆபரணங்கள் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிக நிதி ஒதுக்கிக் கொடுத்துள்ளார். 

இந்த நிதியை மண்டல வாரியாக கலைஞர்களுக்கு வழங்குவதோடு, அவர்களின் குறைகளைக் கேட்டு நாங்கள் வருகிறோம். ஒரு நாட்டின் வளர்ச்சியை கலையின் முன்னேற்றத்தைக் கொண்டே அறிந்து கொள்ள முடியும். இதனால் நாட்டில் கலையை வளர்த்திட நலவாரியம் அமைக்கப்பட்டு, கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு நலதிட்ட  உதவியும் வழங்கப்படுகிறது. 

இதையடுத்து, கலைஞர் ஆட்சியில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. கடந்த பத்து ஆண்டுகளாக பல திட்டங்கள் முடக்கப்பட்டு இருந்தது. அவற்றை மீண்டும் நாங்கள் செயல்பாட்டிற்குக் கொண்டு வருகிறோம். தமிழ்நாடு முழுவதும் மொத்தம் ஆறு லட்சம் நாட்டுப்புறக் கலைஞர்கள் இருக்கின்றனர்.

அதில், 48 ஆயிரம் பேர் மட்டுமே நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். இதனால் ஆன்லைன் மூலம் நலவாரியத்தில் உறுப்பினர்கள் சேர்ப்பதற்கான பதிவுகள் மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. 

மேலும், அரசுப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் நாட்டுப்புற மற்றும் நாடகக் கலைகளைப் பயிற்றுவிக்க தனி வகுப்புகள் நடத்த வேண்டும் என்பதை முதல்வருக்கு பரிந்துரைக்க உள்ளோம். 

இதைத்தொடர்ந்து, மாணவர்களிடம் கலையை வளர்த்தால் தான் நாட்டுப்புறக் கலைகள் தொடர்ந்து வளர்ந்து வரும். கலைஞர்கள் பேருந்துகளில் பயணிகளைப் பாதிக்காத வகையில் இசைக்கருவிகளைக் கொண்டு செல்வதற்கு அனுமதிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மூலம் போக்குவரத்துக் கழகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படவுள்ளது. என்று வாகை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school college special class for folk arts


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->