நடக்கத் தடுமாறும் பள்ளி மாணவிகள் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


நடக்கத் தடுமாறும் பள்ளி மாணவிகள் - நடந்தது என்ன?

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் உள்ள எரேகியில் செயல்படும் செயின்ட் தெரசா பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், 100க்கும் மேலான மாணவிகள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பள்ளி தற்காலிகமாக மூடபட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவிகளின் இரத்த மாதிரிகள் கென்யா மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது. கால்களில் செயலிழப்பை ஏற்படுத்தும் இந்த மர்ம நோயால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. 

இந்த நோய்க்கான சரியான காரணம் தெரியவில்லை என்றும், இவை தொடர்பான மருத்துவ ஆய்வில் கென்யா தடுமாறி வருவதாகவும் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட சிறுமிகளின் உடலில் நீரிழிப்பு ஏற்பட்டிருப்பது மற்றும் எலெக்ட்ரோலைட்டுகளின் எண்ணிக்கை குறைந்திருப்பது ஆகியவை மருத்துவர்கள் மற்றும் பெற்றோரை தடுமாறச் செய்து வருகின்றன. 

சிறுமிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதில் கல்வித் துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது சுகாதாரத் துறை உள்ளிட்டவை ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. மர்ம நோய் பாதிப்பு கண்ட மாணவிகள் அடுத்த அடி எடுத்து வைக்கவே தடுமாறுகிறார்கள். 

இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வைரலாகி வருகிறது. கொரோனா பரவலுக்குப் பின்னர் உலகின் எந்த மூலையில் மர்ம நோய் தலையெடுத்தாலும், அதன் பின்னணி, வீரியம், பரவல், உயிரிழப்புக்கான ஆபத்து உள்ளிட்டவை தொடர்பான அச்சங்கள் அதிகரித்து வருகின்றன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school students affected illness in kenya


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->