பூமியை சுற்றபோகும் குட்டி நிலா! பூமிக்கு ஆபத்தா? என்ன சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்? - Seithipunal
Seithipunal


தற்காலிகமாக மற்றொரு நிலவு இந்த வருடத்தில் பூமிக்கு கிடைக்கப்போகிறது என விஞ்ஞானி தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் 10 மீட்டர்கள் (33 அடி) உள்ள சிறு கோள்  கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி கண்டுபிடிக்கபட்டது. பின்னர் அதற்க்கு Asteroid 2024 PT5 என்று பெயரிடப்பட்டதாக தகவல் வெளியானது.

இதனையும் படிக்கவும் : https://www.seithipunal.com/tamilnadu/tamilnadu-rain-alert-chennai-weather-update-16-09-2024

Asteroid 2024 PT5 என்னும் சிறு கோள் ஆனது வரும்  செப்டம்பர் 29 முதல் 2024 நவம்பர் 25 வரை பூமிக்கு சிறு நிலவாக [mini-moon] செயல்பட உள்ளதாக விஞ்ஞானி தெரிவிக்கின்றனர்.இந்த குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டும் பூமியின் புவியீர்ப்பு விசையினால் ஈர்க்கப்பட்டு இந்த சிறு கோள் பூமியை சுற்றி வரும்.

அதேசமயம் ஒரு முறை முழு சுற்றை நிறைவு செய்யும் முன்னரே [அதாவது நவம்பர் 25க்கு பின்னர்] பூமியின் புவியீர்ப்பு விசையில் இருந்து விடுபட்டு சூரியனை சுற்றவும் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இதனையும் படிக்கவும் : https://www.seithipunal.com/politics/admk-edappadi-palaniswami-announce

சிறு கோள் மிகவும் சிறிய அளவில் உள்ளதால் பூமியைச் சுற்றும் காலகட்டத்தில் இதை வெறும் கண்களால் பார்க்க முடியாது. ஆனால் இந்த காலகட்டத்தில் பூமிக்கும் பூமிக்கு அருகில் இருக்கும் பொருட்களுமான உறவை ஆய்வு செய்து புரிந்துகொள்ள முடியும்.

புவியீர்ப்பு அழுத்தங்கள் மற்றும் விசையினால் பூமிக்கு வெளியில் உள்ளவை எவ்வாறாக செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்ளவும் இந்த நிகழ்வு உதவும் என அமெரிக்கன் ஆஸ்ட்ரோனாமிகள் சொசைட்டி விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Scientist informs that temporarily another moon will be available to earth this year


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->