ஈரானில் நிலநடுக்கம் : 7 பேர் பலி - 440 க்கு மேற்பட்டோர் காயம்.! - Seithipunal
Seithipunal


ஈரான் நாட்டில் உள்ள கோய் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகி உள்ளது. இந்த தகவலை அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கம் அந்த நாட்டு நேரத்தின்படி நேற்று இரவு 23.44 மணியளவில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் அங்குள்ள தேசிய நிலநடுக்க நெட்வொர்க் தளத்தில் 5.9 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது. இதன் விளைவாக 7 பேர் உயிரிழந்ததாகவும், 440 க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஈரான் நாட்டின் செய்தி நிறுவனமான IRNA வின் தகவல் படி, இந்த நில நடுக்கம் மிகவும் வலுவாக இருந்தது என்றும், மேற்கு அஜர்பைஜான் மாகாணத்தின் பல பகுதிகளில் இது உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

அதுமட்டுமல்லாமல், தப்ரிஸ் உட்பட நாட்டின் பல நகரங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்ட பலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seven peoples died and 440 more than peoples injury for earth quake in eran


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->