லிபியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு தப்பி சென்ற மக்கள்.! கப்பல் கவிழ்ந்து 73 பேர் மாயம்.!  - Seithipunal
Seithipunal


லிபியா நாட்டை ஒரு மைய புள்ளியாக வைத்து ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு கடல் வழியே பயணம் செய்கின்றனர். இந்த லிபியா நாட்டில் உள்நாட்டு குழப்பம் மற்றும் கிளர்ச்சியாளர்கள் வன்முறை போன்றவற்றால் நிலையற்ற அரசாட்சி காணப்படுகிறது. 

இதனால், அந்நாட்டில் உள்ள மக்களும் தங்களை பாதுகாத்து கொள்வதற்காக வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர். இதற்காக அவர்கள் கப்பல் மற்றும் படகுகள் மூலம் மத்திய தரை கடல் வழியே ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக தப்பித்துச் செல்கின்றனர். 

அவ்வாறு செல்லும் போது, நிறைய விபத்துகளும் ஏற்படுகின்றன. இருப்பினும், வேறு வழியில்லாமல் பொதுமக்கள் இந்த பயணத்திற்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். 

அந்தவகையில், நேற்று முன்தினம் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக புறப்பட்டு சென்ற படகு ஒன்று லிபிய கடற்கரை பகுதியில் கவிழ்ந்துள்ளது. அவர்களை மீட்கும் பனி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஐ.நா.வுக்கான புலம்பெயர்வோர் அமைப்பு நேற்று செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது:- "லிபியா கடற்கரை அருகே படகு கவிழ்ந்த விபத்தில் இதுவரை 11 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. 

ஏழு பேர் நீந்தி கரை சேர்ந்துள்ளனர் என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காணாமல் போன எழுபத்து மூன்று அகதிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்து இருக்க கூடும் என்றும் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seventy three migrants missing for boat capsized in libiya sea


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->