ஐயோ.. அப்பா.. என கதறும் ஐரோப்பா- 500 வருடத்தில் இல்லாத பெரும் கொடுமையை சந்திக்கும் ஐரோப்பா..! . - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக பரவிய கோவிட் , மக்களின் இயல்பு வாழக்கையை பாதித்தது. இதன் தொடர்ச்சியாக பொருளாதார தேக்கம், விலைவாசி உயர்வு, உணவு பொருட்கள் பற்றாக்குறை, என பல பின்விளைவுகளையும் சில நாடுகள் சந்தித்துள்ளன. இதுமட்டுமல்லாமல், அடுத்தடுத்து உலகில் பல்வேறு நாடுகள் பருவ நிலை மாற்றம், காட்டுத்தீ போன்ற இயற்கை பேரிடர்களாலும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.

இந்நிலையில், கடந்த 500 வருடங்களில் இல்லாத கடுமையான வறட்சியை ஐரோப்பா கண்டம் சந்தித்து வருகிறது. 

இந்த ஆண்டின் ஆரம்பம் முதலே ஐரோப்பாவின் பல பகுதிகளில் வறட்சிக்கான அறிகுறி தென்பட்ட நிலையில், இம்மாதம் ஆரம்பத்தில் மோசமடைந்து வருகிறது. இந்த நிலைமை இப்படியே போனால் நவம்பர் மாதத்தில், மேற்கு ஐரோப்பிய-மத்திய தரை கடல் பகுதிகளில் வழக்கத்தை விட அதிக வெப்பம் மற்றும் வறட்சி உச்சத்தை  அடையும் என்றும் கோடை காலத்தில் பல ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்பம் பல வாரங்கள் நீடிக்கும் என்றும் காட்டுத்தீ ஏற்படவும் வழிவகுக்கும். என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போது ஐரோப்பியாவில் உள்நாட்டு கப்பல் போக்குவரத்து குறைந்து வருவதால், மின்உற்பத்தியும் பாதிக்கப்பட்டு, உணவு தானிய விளைச்சலும் குறைந்துள்ளது. ஐரோப்பாவில் 47 சதவீத பகுதிகள் ஈரப்பதம் இல்லாமல் மண் வறண்டு போய் காணப்படுகின்றது. 17 சதவீதம் அபாய நிலையில் உள்ள இந்த பகுதிகளில் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளன.

பிரிட்டனில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெரும்பாலான பகுதிகளில் நீர்நிலைகள் வற்றியதால், தேம்ஸ் நதி பாலவனமானதாக செய்திகள் வெளியாகின. இதற்கு அங்கு நிலவிய கோடை வெப்பம். அனல் காற்று தான் காரணம்  ஆகும்.

இதுமட்டுமல்லாமல், போர்ச்சுகல், ஸ்பெயின் போன்ற நாடுகளில் கடும் வெப்பம் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த சம்பவமும் ஏற்பட்டுள்ளது. இதனால்,ஐரோப்பா மக்களின் சுகாதார பாதிப்புகளுக்கு எச்சரிக்கை விடும் வகையில், பருவநிலை மாற்றத்தினை எதிர்கொள்வதற்கான கூடுதல் நடவடிக்கையையும் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Severe drought in Europe after 500 years


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->