சொகுசு கப்பலில் தீ விபத்து.. நடுக்கடலில் சிக்கிய 288 பயணிகள்.! - Seithipunal
Seithipunal


கிரீஸ் நாட்டில் இருந்து சுமார் 288 பயணிகளை ஏற்றிச் சென்ற யூரோபெரி ஒலிம்பியா என்ற உல்லாச கப்பல் தீப்பற்றி எரிந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிரீஸ் நாட்டில் இருந்து மத்திய தரைக் கடலில் உள்ள அயோனியன் கடலின் வழியே  யூரோபெரி ஒலிம்பியா எனும் உல்லாசக் கப்பலானது இத்தாலி நாட்டிற்கு சென்றது. அதில் மொத்தம் சுமார் 228 பயணிகள் இருந்தனர்.

இந்த நிலையில் 4:30 மணிக்கு கிரீஸ் மற்றும் அல்பேனிய நாடுகளுக்கு இடையில் இருக்கும் கோர்பு தீவிற்கு அருகே சென்ற கப்பலில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. எனவே உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் அளித்தனர்.

அதனையடுத்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கப்பலில் இருந்த பயணிகளை பாதுகாப்பாக மீட்டனர். அதன்பிறகு அவர்களை அருகே இருக்கும் கோர்பு தீவிற்கு பாதுகாப்பாக அழைத்து சென்றனர். தற்போது தீ விபத்திற்கான காரணம் என்னவென்று காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ship fire in Greece


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->