பாகிஸ்தானில் கோதுமை மாவு தட்டுப்பாடு: ரூ.1500 வரை விற்பனை.!
Shortage of wheat flour in Pakistan selling up to Rs 1500 kg
கோதுமை மாவிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பாகிஸ்தான் தற்போது கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் கோதுமை மாவு கராச்சியில், ஒரு கிலோ 140 முதல் 160 விற்கப்படுகிறது. மேலும் இஸ்லாமாபாத் மற்றும் பெஷாவரில் 10 கிலோ மாவு மூட்டை ரூ.1500க்கும், 20 கிலோ மூட்டை ரூ.2800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மாவு பொட்டலங்களை அந்நாட்டு அரசு வழங்கி வருகின்றது. இதில் குறைந்த விலையில் மாவு வாங்க முயன்றபொது கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இதில் சிந்து மாநிலத்தின் மிர்பூர் காஸ் மாவட்டத்தில் ஒருவரும், ஷாஹீத் பெனாசிராபாத் மாவட்டத்தின் சக்ரந்த் நகரில் 3 பெண்களும் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். கடந்த ஆண்டு போதுமான கோதுமை இருப்பு வைக்கப்படாததே தற்போதைய கோதுமை மாவு தட்டுப்பாட்டிற்கு காரணம் என்று மக்கள் பாகிஸ்தான் அரசு மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
English Summary
Shortage of wheat flour in Pakistan selling up to Rs 1500 kg