நோபல் பரிசு வாங்கியவரை குளத்தில் தூக்கிப்போட்ட ஊழியர்கள்.. காரணம் என்ன தெரியுமா.! - Seithipunal
Seithipunal


நோபல் பரிசு வாங்கியவரை சக ஊழியர்கள் குளத்தில் தூக்கிப்போட்டு கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உலகிலேயே மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு ஒவ்வொரு வருடமும் அமைதி, வேதியியல், இயற்பியல், இலக்கியம், மருத்துவம் மற்றும் பொருளாதாரம் போன்ற துறைகளில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு வழங்கப்படும்.

நோபல் பரிசு வழங்கப்படும் நபர்களுக்கு சான்றிதழ், பதக்கம் மற்றும் ரொக்க பரிசு போன்றவை வழங்கப்படும். இந்த நிலையில் தற்போது இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஸ்வாந்தே பாபோ என்பவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதனை கொண்டாடும் வகையில் அவருடன் பணியாற்றும் சக ஊழியர்கள் குளத்தில் தூக்கி போட்டு மகிழ்ச்சியை கொண்டாடியுள்ளனர். அதாவது பாரம்பரியமாக அங்கு பிஎச்டி பட்டம் பெற்றவர்களை அந்த குளத்தில் தூக்கி வீசுவார்களாம். தற்போது இந்த வீடியோ நோபல் பரிசு அமைப்பினுடைய அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shvanthe babo nobel prize winner celebration


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->