பாலியல் வன்கொடுமை! சிங்கப்பூரில் இந்தியருக்கு வழக்கப்பட்ட தண்டனை! - Seithipunal
Seithipunal



பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இந்தியர் ஒருவருக்கு 16 ஆண்டுகள் சிறையும், 12 சவுக்கடிகளும் தீர்ப்பாக வழங்கியுள்ளது சிங்கப்பூர் நீதிமன்றம்.

2019-ல் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடத்தல் மற்றும் திருட்டு குற்றங்களும் இதில் சேரும்.

சிங்கப்பூரில் தூய்மை பணியாளராகப் பணியாற்றிய 26 வயது இந்திய இளைஞரான சின்னய்யா என்பவர், கடந்த 2019 ஆம் ஆண்டு, மே 4-ம் தேதி பின்னிரவு நேரத்தில், கல்லூரி மாணவி ஒருவரைப் பின்தொடர்ந்து சென்று, அவரை தாக்கி மறைவான காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மறுநாள், முகம் முழுவதும் காயங்களும், கீறல்களும், கழுத்து நெறிக்கப்பட்ட தடயங்களுடன் அந்த மாணவி மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட மாணவியை, அவரின் காதலரால் கூட அடையாளம் காட்ட முடியவில்லை. அவர் அந்த அளவுக்கு தாக்கப்பட்டு உள்ளார்.

இந்த வழக்கில் தீவிரமாக விசாரணை செய்த சிங்கப்பூர் போலீஸ், மறுநாளே கொடூரன் சின்னய்யாவை கைது செய்தனர்.

இந்த வழக்கில் சின்னய்யாவின் மனநிலையைச் சோதிக்க, பல சுற்று உளவியல் மதிப்பீடு செய்யப்பட்டது. இதன் காரணமாக இந்த வழக்கு சுமார் 4 ஆண்டுகள் எடுத்து கொண்டதாக நீதிமன்றத்தில் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், குற்றவாளியின் இந்த குற்றத்தின் ஆழத்தைக் கருத்தில் கொண்டும், கடந்த ஜுலை மாதம் மாணவி அளித்த  வாக்குமூலத்தை ஆதாரமாக கொண்டும், குறைந்தபட்சம் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 12 சவுக்கடிகளும் கோரப்பட்டது. 

இதனையடுத்து சிங்கப்பூர் நீதிமன்றம்  குற்றவாளி சின்னையாவுக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனையும், 12 சவுக்கடிகளும் தீர்ப்பாக வழங்கியது.

முன்னதாக மாணவி அளித்த வாக்குமூலத்தில், அன்று நடந்த சம்பவம் அவரை அணுஅணுவாக சித்தரவதை செய்ததாகவும், துர்கனவுகளும், எண்ணங்களும் தொடர்ச்சியாக வருவதாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Singapore Court judgement in Abuse case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->