பொருளாதார நெருக்கடியில் இலங்கை.! முதலீடு செய்ய விரும்பும் சிங்கப்பூர்.!
Singapore wants to trade and invest in srilanka
அந்நிய செலவாணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் சர்வதேச வங்கிகள், நிறுவனங்கள், நிதி மற்றும் கட்டமைப்பு ரீதியான உதவிகள் வழங்கி வருகின்றன.
இந்நிலையில் முன்னாள் ஜப்பான் அதிபர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கிற்கு சென்ற இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை சந்தித்து பேசினார்.
இதையடுத்து இலங்கை மற்றும் சிங்கப்பூர் இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை செயல்படுத்த இலங்கை முன்னுரிமை வழங்குவதாகவும், இலங்கையில் சர்வதேச வர்த்தகத்திற்கான அலுவலகம் ஒன்று கட்டப்பட்டிருப்பதை குறித்தும் அதிபர் ரணில் விக்ரமசிங்கே சிங்கப்பூர் பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தை வரவேற்ற சிங்கப்பூர் பிரதமர், இலங்கையில் முதலீடு மற்றும் வணிகம் செய்வதற்கு எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட இலங்கை வருமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்கே, சிங்கப்பூர் பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
English Summary
Singapore wants to trade and invest in srilanka