மேற்கு கரையில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் - 6 பாலஸ்தீனியர்கள் பலி
Six Palestinians killed in Israeli army attack in west bank
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் 6 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
கடந்த வாரம் வடக்கு மேற்குக்கரை நகரமான ஹவாராவில் இரண்டு இஸ்ரேலிய சகோதரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து இஸ்ரேலிய படைகள் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரமான ஜெனின் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது இஸ்ரேலிய சகோதரர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் ஹிமாஸ் இயக்கப் போராளி ஒருவர் உட்பட 6 பேரை இஸ்ரேல் படையினர் சுட்டுக்கொன்றனர்.
இதில் இஸ்ரேலிய சகோதரர்களைக் கொன்ற தீவிரவாதி 49 வயதான அப்துல் ஃபத்தாஹ் கரூஷா என்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் அடையாளம் கண்டுள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் 12 பேர் காயம் அடைந்தனர் என்றும், கொல்லப்பட்டவர்கள் 22 முதல் 49 வயது வரையிலான ஆண்கள் என்று பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பாலஸ்தீனிய ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் செய்தித் தொடர்பாளர் நபில் அபு ர்டெனே, பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேலிய இராணுவம் முழுமையான போரை நடத்தி வருவதாகவும், ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான சமீபத்திய முயற்சிகளை முறியடித்ததற்காகவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
English Summary
Six Palestinians killed in Israeli army attack in west bank