அடுத்தடுத்து துயரம் -  மும்பை அரசு மருத்துவமனையில் 16 குழந்தைகள் உயிரிழப்பு.!         - Seithipunal
Seithipunal


அடுத்தடுத்து துயரம் -  மும்பை அரசு மருத்துவமனையில் 16 குழந்தைகள் உயிரிழப்பு.!        

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நான்டெட் நகரில் ஷங்கர் ராவ் சவான் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் நேற்று 24 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 16 பேர் குழந்தைகள். இந்த உயிரிழப்புகளுக்கு மருந்துப் பொருட்களின் பற்றாக்குறையே காரணம் என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இதனை மறுத்துள்ள, ஷங்கர் ராவ் சவான் அரசு மருத்துவமனையின் டீன் ஷியாம் ராவ் வகோடே, "மருந்துகள் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. 

உரிய கவனிப்பு கொடுக்கப்பட்டும் நோயாளிகள் ஒத்துழைப்பு அளிக்காததே இந்த உயிரிழப்புக்குக் காரணம். செப்டம்பர் 30-ம் முதல் அக்டோபர் 1 தேதி வரை பிறந்த 3 நாட்களுக்குள் 12 குழநத்தைகள் உயிரிழந்துள்ளனர். குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் 142 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளன. 

அவர்களில் 42 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஆக்ஸிஜன் மற்றும் வென்டிலேட்டர் ஆகியவை உள்ளன. இவர்கள் அண்டை மாவட்டங்களான ஹிங்கோலி, பர்பானி, வாஷிம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள். அண்டை மாநிலமான தெலங்கானாவின் கிராமங்களில் இருந்தும் சிலர் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்றுத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மும்பை உயர் நீதிமன்றம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளது. இது தொடர்பாக பேசிய மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, ஒவ்வொரு குடிமகனுக்கும் முறையான மருத்துவம் கிடைக்கச் செய்ய அரசு கடமைப்பட்டுள்ளது. இந்த வழக்கை வரும் 6-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள இருக்கிறோம்" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sixteen childrens died in mumbai govt hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->