நிதி மோசடி - இலங்கையில் 60 இந்தியர்கள் கைது.!
sixty indians arrest in srilanga for money fraud
இலங்கையில் வாழும் 60 இந்தியர்கள் ஆன்லைன் நிதி மோசடியில் ஈடுபட்டதாக அந்நாட்டின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில், சமூக ஊடக தொடர்புகளுக்கு பணம் தருவதாக வாட்ஸ்அப் குழுவில் விளம்பரப்படுத்தப்பட்டு, அதன் மூலம் பாதிக்கப்பட்ட ஒரு நபர் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரைத் தொடர்ந்து கொழும்பு புறநகர்ப் பகுதிகளான மடிவெல, பத்தரமுல்லை, மேற்கு கடலோர நகரமான நெகொம்போ உள்ளிட்ட பகுதிகளில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய சோதனையில் 60 இந்தியர்களிடம் இருந்து 135 செல்போன்கள், 57 மடிக்கணினிகள் கைப்பற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து அவர்களிடம் சம்பவம் தொடர்பாக நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் சிறிதளவு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர், அவர்களிடம் பணம் டெபாசிட் செய்ய வற்புறுத்தப்பட்டதும், பெர்டெனியாவில், தந்தை, மகன் ஆகிய இருவர் மோசடியாளர்களுக்கு உதவியதாக ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நெகொம்போவில் ஒரு சொகுசு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்ட முக்கிய ஆவணங்கள் மூலம் 13 சந்தேக நபர்கள் ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டனர். அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் மேலும் 19 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
sixty indians arrest in srilanga for money fraud