குஜராத்தில் பாஜகவை நோக்கி செல்லும் ஆம் ஆத்மி கார்ப்பரேட்டர்கள்.! - Seithipunal
Seithipunal


குஜராத்தில் பாஜகவை நோக்கி செல்லும் ஆம் ஆத்மி கார்ப்பரேட்டர்கள்.!

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் முனிசிபல் கார்ப்பரேஷன் கார்ப்பரேட்டர்களான கானு கெடியா மற்றும் அல்பேஷ் படேல் நேற்று பாஜகவில் சேர்ந்தனர். ஏற்கனவே ஆறு ஆம் ஆத்மி கார்ப்பரேட்டர்கள் பாஜகவில் இணைந்த நிலையில் மேலும், இரண்டு பேர் இணைந்துள்ளனர்.

இதற்கு ஆம் ஆத்மி தலைவர் கோபால் இத்தாலியா, இரண்டு கார்ப்பரேட்டர்களுக்கும் பணம் கொடுக்கப்பட்ட பிறகு, பாஜகவுக்கு தாவியதாகக் குற்றம் சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டினை நிராகரித்த பாஜக "கெடியாவும், படேலும் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் தான் பாஜகவில் இணைந்தனர். 

அவர்கள் குஜராத் மற்றும் இந்தியாவில் பாஜகவின் தலைமையால் ஈர்க்கப்பட்டனர்" என்று தெரிவித்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற 120 உறுப்பினர்களைக் கொண்ட சூரத் முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலில் 27 இடங்களை வென்று ஆம் ஆத்மி எதிர்க்கட்சியாக உருமாறியது.

பாஜக 93 இடங்களை பிடித்து வென்றது. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வரவில்லை. மேலும், ஆம் ஆத்மி சார்பில் வென்ற 27 இடங்களில், தற்போது 12 கார்ப்பரேட்டர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

soorath am adhmi corperators joining bjp in gujarat


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->