அமெரிக்கப் போர்க்கப்பலின் வருகையை எதிர்த்து வடகொரியா ஏவுகணை சோதனை.! தென்கொரியா கண்டனம் - Seithipunal
Seithipunal


கிழக்கு ஆசிய நாடான வடகொரியா ஐ.நா. சபை மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி அணு ஆயுத சோதனைகளை செய்து வரும் நிலையில், அண்டை நாடுகளுக்கு பாதுகாப்பற்றத்தன்மை நிலவி வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் விமானம் தாங்கிய யுஎஸ்எஸ் ரொனால்ட் ரீகன் போர்க்கப்பல் தென் கொரியாவின் பூசான் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்த அமெரிக்காவின் போர்க்கப்பலின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியாவின் டேச்சோன் பகுதிக்கு அருகில் குறுகிய தொலைவு இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் இந்த அணு ஆயுத சோதனை ஆத்திரமூட்டும் செயல் என தென் கொரிய ராணுவம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் வடகொரியா ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானங்களை மீறுவதாகவும், சர்வதேச நாடுகளுக்கிடையேயான அமைதியை சீர்குலைப்பதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

South Korea condemns north Korea missile test over america ship arrival


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->