தென் கொரியாவில் மிதமான நிலநடுக்கம்! பீதியில் மக்கள்.!
South Korea earthquake
தென்கொரியாவின் தென் மேற்கு பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.00 அலகுகளாக பதிவாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவின் தென்மேற்கு மாவட்டம் புவான் அருகே பூமிக்கு அடியில் 8 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருள் செய்தல் குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தினால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
இந்த நிலநடுக்கம் வடக்கு மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள மக்களால் உணரப்பட்டதாகவும் இந்த நிலநடுக்கத்தினால் வீட்டின் ஜன்னல்கள் உடைந்து பொருள்கள் கீழே விழுந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.