லித்தியம் பேட்டரி தொழிற்சாலையில் ''பயங்கர தீ'' விபத்து - உடல் கருகி உயிரிழந்த தொழிலாளர்கள்.!
South Korea lithium battery factory fire accident 8 killed
தென்கொரியா, ஜியோங்கி மாகாணம் ஹவாஸ்சோங் நகரில் லித்தியம் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று 67 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது தொழிற்சாலையில் திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்கள் பலரும் சிக்கிக்கொண்டனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர்.
மேலும் தொழிற்சாலையில் சிக்கிக் கொண்டிருந்த தொழிலாளர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் பணியாற்றிய 8 பேர் உடல் கருகி பரிதபமாக உயிரிழந்து விட்டனர்.
மேலும் 23 தொழிலாளர்களின் நிலை என்ன என்பது குறித்து எந்த ஒரு விவரமும் தெரியவில்லை. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதனை அடுத்து மாயமான தொழிலாளர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
English Summary
South Korea lithium battery factory fire accident 8 killed