தென்கொரியா | பொதுமக்களை சரமாரியாக குத்திய மர்ம நபர்! இரத்த வெள்ளத்தில் 9 பேர்! - Seithipunal
Seithipunal


தென்கொரியா, சியோங்கனம் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் நேற்று இரவு ஏராளமான பொதுமக்கள் திரண்டு, அங்குள்ள கடைக்குள்ளும், வெளியிலும் குவிந்திருந்தனர். 

வணிக வளாகத்துக்குள் ஒரு கார் வேகமாக வந்து, திடீரென நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது கார் ஓட்டுநர் காரை ஏற்றியதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். 

பின்னர் ஒரு மர்ம வாலிபர் காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கி கண்ணில் பட்டவர்களை எல்லாம் அவன் கையில் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினான்.

இதில் பலருக்கு கத்திக்குத்து ஏற்பட்டது. பொது மக்கள் இதை பார்த்ததும் உயிருக்கு பயந்து நான்கு புறமும் சிதறி ஓடினார்கள். இந்த கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த 9 பேரும் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். 

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பாதுகாப்பு படை போலீசார், பொதுமக்கள் மீது காரை ஏற்றி, கத்தியால் குத்திய வாலிபரை பிடித்து கைது செய்தனர். பின்னர் விசாரணையில் அவருக்கு 22 வயது இருக்கும் என்றும் ஏன் அவர் இந்த தாக்குதலை செய்த என்றும் தெரியவில்லை. 

மேலும் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என தெரிவித்து, அந்த வாலிபருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. 

கார் ஏற்றியதிலும், கத்திக்குத்திலும் படுகாயம் அடைந்த 14 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இது போன்ற சம்பவம் தென்கொரியாவில் இந்த ஆண்டு நடந்துள்ளது 2- வது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

South Korea mysterious person stabbed public


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->