வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள நாட்டின் பாதுகாப்பு திறனை அதிகரிக்க உள்ளதாக தென்கொரிய அறிவிப்பு.!
Southkorea increase defence over north Korea threats
வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள நாட்டின் பாதுகாப்பு திறனை அதிகரிக்க உள்ளதாக தென்கொரிய அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்குமுன் கிழக்கு ஆசிய நாடான வடகொரியா பல்வேறு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி இந்த ஆண்டு 18வது முறையாக தலைநகர் பியாங்க்யாங்கிலிருந்து 8 அதிநவீன ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது.
வடகொரியாவின் இந்த தொடர் சோதனையால் அந்நாட்டை சுற்றியுள்ள நாடுகளை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில் தென்கொரியா வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணு ஆயுதங்களை எதிர்கொள்ள தங்கள் நாட்டு பாதுகாப்பு திறனை அதிகரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதனையடுத்து சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய பாதுகாப்பு கூட்டத்தில் பங்கேற்ற தென்கொரியாவின் பாதுகாப்பு அமைச்சர் லீ ஜாங் சுப், வடகொரியாவின் ஏவுகணை திட்டங்களை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Southkorea increase defence over north Korea threats