அமெரிக்காவில் இருந்து 4 விண்வெளி விரர்களுடன் சென்ற ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்..!. - Seithipunal
Seithipunal


உலக பணக்காரரான எலோன் மாஸ்க்கிற்கு சொந்தமான ஆக்­ஸி­யம் மற்றும் ஸ்பேஸ்­எக்ஸ் நிறுவனங்கள் விண்­வெ­ளி­யில் சொந்­த­மாக ஆய்வு நிலை­யத்தை அமைக்­கும் நோக்கத்தோடு விண்­வெளி வீரர்களை விண்ணில் செலுத்த ஏற்பாடு செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாசாவுடன் செய்யப்பட்ட வணிக ஒப்பந்தத்திற்கு கீழ் ஸ்பேஸ்­எக்ஸ் நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை ஃபுளோரிடா மாகாணத்தின் மெரிட் தீவிலுள்ள கென்னடி ஏவுதளத்திலிருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் 4 வீரர்களை விண்ணில் செலுத்தியுள்ளது.

ஆக்சியம் ஸ்பேஸ்-2 என்ற பெயரில் விண்ணுக்கு செல்லும் இந்த குழுவில் ஓய்வு பெற்ற மூத்த விண்வெளி வீரர் பெக்கி விட்சன், அமெரிக்க பைலட் ஜான் ஷோப்னர் மற்றும் சவுதி அரேபியா விஞ்ஞானிகளான அலி அல்கர்னி மற்றும் ரய்யானா பர்னாவி ஆகியோர் அடங்குவர்.

இதில் ரய்யானா பர்னாவி சவுதி அரேபியாவிலிருந்து விண்வெளிக்குச் செல்லும் முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் இந்தக் குழு 20க்கும் மேற்பட்ட விண்வெளி ஆய்வுகளில் ஈடுபடுவார்கள் என ஸ்பேஸ்­எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Spacex sends 4 astronauts to space


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->