இலங்கையில் புதிய அதிபராக இன்று அனுரகுமார திசாநாயக பதவியேற்பு! - Seithipunal
Seithipunal


கடந்த 2019-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த கோத்தபய ராஜபக்சேவின் அரசு 3 ஆண்டுகளில் ஆட்சியை பறிகொடுத்தது.

தொடர்ந்து  இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அவரது பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது.

இதன் காரணமாக, இலங்கையின் புதிய அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில்,  மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

இந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளா் அனுரகுமார திசாநாயக வெற்றி பெற்றுள்ளார். மேலும், எதிா்க்கட்சித் தலைவா் சஜீத் பிரேமதாச இரண்டாவது இடத்தைப் பெற்ற நிலையில், தற்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்கே 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்நிலையில்  இலங்கை அதிபராக அனுர குமார திசாநாயக இன்று கொழும்பில் உள்ள அதிபா் செயலகத்தில் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sri Lanka new President Anurakumara Dissanayake sworn in today


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->