இலங்கையில் பொருளாதார நெருக்கடி! பெட்ரோல் டீசல் வாங்க புதிய கட்டுப்பாடுகள்.!
Srilanka economic crises petrol diesel bought new rule
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல், டீசல் வாங்க பொதுமக்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இலங்கையில் தற்போது மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அங்கு எரிபொருள் மற்றும் உணவு பொருட்களின் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீதிகளிலும், அதிபர் அலுவலகத்திற்கு முன்பும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஒரு பெட்ரோல் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் ஆயிரம் ரூபாய் வரையிலும், மூன்று சக்கர வாகனங்களுக்கு 1500 ரூபாய் வரையிலும், கார், ஜீப் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் 5000 ரூபாய் வரையிலும் பெட்ரோலை வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பஸ் மற்றும் லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் இல்லை என்று தெரிவித்துள்ளது.
English Summary
Srilanka economic crises petrol diesel bought new rule