ஐ.எம்.எப் கடனுதவி வழங்கினால் மட்டுமே பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் - இலங்கை அதிபர்
Srilankan president says economy will be recovered if IMF provide loan
ஐ.எம்.எப் கடனுதவி வழங்கினால் மட்டுமே இலங்கை பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்டெடுக்க முடியும் என்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளாா்.
பணவீக்கம் மற்றும் அன்னிய செலாவணி பற்றாக்குறையால் இலங்கை வரலாறு காணாத அளவு பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து சர்வதேச நிதியத்திடம் கடனுதவி பெறுவதற்கு இலங்கை அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மேலும் சர்வதேச நிதியம் கடன் வழங்குவதற்கு 15 நிபந்தனைகளை விதித்துள்ள நிலையில், அவற்றை நிறைவேற்றும் நோக்கில் இறக்குமதிக்கான கட்டுப்பாடு, வருமான வரி மற்றும் மறைமுக வரி ஆகியவற்றை உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை இலங்கை அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் கண்டி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இலங்கை அதிபர், சா்வதேச நிதியம்(ஐ.எம்.எப்) கடனுதவி வழங்கினால் மட்டுமே திவாலாகி வரும் இலங்கை அரசை மீட்க முடியும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஒரு குறிப்பிட்ட நாடு திவாலாகும் பொழுது ஐ.எம்.எஃப் தவிர வேறெந்த சா்வதேச அமைப்பும் உதவாது. பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த நாடுகள் ஐ.எம்.எப் உதவியால் மட்டுமே மீண்டுள்ளன. குறிப்பாக கிரீஸ் நாடு ஐ.எம்.எப் உதவியுடன் பொருளாதாரத்தை 13 ஆண்டுகளில் மீட்டெடுத்தது என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Srilankan president says economy will be recovered if IMF provide loan