மீளுமா ஈழம்..? "தமிழர்ளுக்கு அதிகாரம்".!! இலங்கை அதிபர் முழு ஆதரவு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் நடந்த இனப் பிரச்னைக்கு தீர்வு காண, முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ், முன்னாள் இலங்கை அதிபர் ஜெயவர்தனே இணைந்து, 1987ல் அந்நாட்டு அரசியலமைப்பு சட்டத்தில் 13வது திருத்தம் செய்வதற்கான உடன்பாட்டை உருவாக்கினர்.
அதன்படி அரசியலமைப்பு சட்டம் 13ஏ தமிழ் சமூகத்திற்கு அதிகாரப் பகிர்வு வழங்குகிறது. இந்த திருத்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதன் மூலம் இலங்கையில் உள்ள எல்லா சமூக மக்களிடத்திலும் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும்.


இந்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கையின் பெரும்பாலான தமிழ் கட்சிகள் கோரி வருகின்றன. இந்தியாவும் அவர்களின் குரலுக்கு ஆதரவு தெரிவித்து வரும்  நிலையில் தமிழர்கள் பெரும்பான்மை வகிக்கும் யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேகலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர் "13வது திருத்தத்தின் விதிகளை நாம் ஆராய்ந்தால், வலுவான உள்நாட்டு பொருளாதாரத்தை நிறுவுவதற்கு போதுமான அதிகாரம் உள்ளது. அந்த விவகாரங்களில் தலையிட மாட்டோம் என உறுதியளிக்கிறோம். அதற்கான முன்முயற்சிகளை நீங்கள் எடுக்க வேண்டும் என நான் ஊக்குவிக்கிறேன்.


தற்போது மேற்கு மாகாணம் சுதந்திரமான செலவினங்களைச் செய்யக்கூடிய ஒரே பிராந்தியமாக உள்ளது. மற்ற மாகாணங்கள் நிதி ரீதியாக அதைச் சார்ந்திருக்கின்றன. இதன் காரணமாக இந்த விவகாரத்தில் மறுபரிசீலனை அவசியமாகிறது. 13வது திருத்தத்தில் உள்ள அதிகாரங்களை பயன்படுத்துவதன் வாயிலாக ஒவ்வொரு மாகாணமும் வளர்ச்சிக்கான பாதையில் செல்லும். இந்த அதிகாரங்களை செயல்படுத்த வேண்டிய நேரம் இது" என பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SriLankan President support Autonomous power for Tamils


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->