கிருஸ்துவ தேவாலயத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் முன்னாள் அதிபருக்கும் தொடர்பு : சம்மன் அனுப்பியது நீதிமன்றம் ! - Seithipunal
Seithipunal


கடந்த 2019 ஆம் ஆண்டின் ஈஸ்டர் நாள் கொண்டாட்டத்தின் போது இலங்கையில் நிகழ்ந்த தற்கொலை படை தாக்குதலில் இந்தியர்கள் உட்பட சுமார் 270 பேர் கொல்லப்பட்டனர்.

இத்தாக்குதலுக்கு ஐ எஸ் ஐ எஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த குண்டு வெடிப்பு சமபத்திற்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனத்தை தெரிவித்தன. 

இந்த தாக்குதல் சம்பவம் நடைபெறுவதற்கு முன்னதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், அதனை இலங்கையின் முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா புறக்கணித்துள்ளதாக நம்பப்படுகிறது. .

இதன் காரணமாக இலங்கையின் முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை சந்தேக நபராக இலங்கை நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேலும், கொழும்பு நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வரும் அக்டோபர் 14ஆம் தேதி நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Suspicion on the former president in the blast case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->